Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம்.

(எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும்.

நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும்.

நட +ப் + ப் + ஆன்



நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம்.

(எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது?

(அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின்

வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.

வேர்ச்சொல்: பகுதி விகுதிகளில் பகுதியாக அமைவதே வேர்ச்சொல்லாகும்.
நடந்தான் – நட
படித்தான் – படி
வைத்தான் – வை
போயினான் – போ
தின்றான் – தின்
பார்த்தான் – பார்
கேட்டான் – கேள்
வந்தான் – வா
மடிந்தான் – மடி
விட்டான் – விடு
உண்டான் – உண்
அஃகினான் – அஃகு
தேய்த்தான் – தேய்
சென்றான் – செல்
வாழ்ந்தான் – வாழ்

வேர்ச்சொல் என்பது கட்டளைப் பொருளில் அமைய வேண்டும். உங்களுக்கு முன்னிருப்பவரைப் பார்த்துச் சொல்வது போல் இருக்க வேண்டும். (எ.கா) ஓடு, விளையாடு, படி, மகிழ், தூங்கு, சிரி, எழு, செய்.

எச்சங்களாகவும் முற்றாகவும் உள்ள சொற்களை வினைப் பகுதியா மாற்றுதல்.

பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று எவ்வாறு மாற்றமடைகின்றன. என்பதைக் காண்போம்.

வென்றான் – வெல்
நோற்றான் – நோல்
விற்றான் – வில்
வேறல் – வெல்
சேறல் – செல்
கண்டான் – காண்
தொடங்குகிறது – தொடங்கு
சந்தித்தார் – சந்தி
நொந்தான் – நொ
செத்தான் – சா
இறந்தார் – இற
அரைந்தான் – அரை
எள்ளற்க – எள்
நீக்கிய – நீக்கு
உற்ற – உறு
கூவியபடி – கூவி
கொட்ட – கொட்டு
வருவார் – வா
சந்தித்தான் – சந்தி
கற்றவர் – கல்
கொண்டான் – கொள்
நகுதல் – நகு
நவின்றான் – நவில்
மொழிந்தாள் – மொழி
வெட்டினார் – வெட்டு
இட – இடு

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.