Skip to main content

Posts

Showing posts from March, 2022

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம் குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர் குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும். முக்கூடற்பள்ளு ஆசிரியர் குறிப்பு: இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர். சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம். அம்மானை ஆசிரியர் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார். ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயராகும் தாண்டவமூர்த்தி என்பவர்க்கு மகனாக பிறந்தார். இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார். இவர் திருவாடுதுஐற ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தார். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். நூல் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று. கலம்பகம் – கலம் + பகம் எனப் பிரியும், கலம் – பன்னிரண்டு, பகம் – ஆறு ஆக பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - புராண இலக்கியங்கள்

பெரிய புராணம் ஆசிரியர் குறிப்பு: பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார் இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர் இவர் அநாபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர். இவர் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவரைத் தெய்வ சேக்கிழார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவிலும் எழுப்பினர். நூற்குறிப்பு: தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார். அவ்வடியார்கள் வரலாற்றை கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் எனும் பெயர் பெற்றது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர் திருத் தொண்டர் புராணம் தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்டதெனவும் கூறுவர். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையவன. எனவே தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்,பக்திச்சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் புறநானூறு – ஒளவையார் ஆசிரியர் குறிப்பு: ஒளவையார் சங்கப் புலவர், அதியமானின் நண்பர். அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தும் அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஒளவையார். சங்கப்பாடல்கள் பாடிய ஒளவையாரும், ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவர் அல்லர் வேறு வேறானவர். நூல் குறிப்பு: புறநானூறு – புறம் +நான்கு+ நூறு. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது. புறநானூறு                          “நாடாகு ஒன்றேர் காடாகு ஒன்றேர்                          அவலாகு ஒன்றேர் மிசையாகு ஒன்றேர்                          எவ்வழி நல்லவர் ஆடவர்                          அவ்வழி நல்லை; வாழிய நிலனே! “- ஓளவையார் புறநானூறு – மோசிகீரனார் ஆசிரியர் குறிப்பு : தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது. உடல் சோர்வினால் அரச

வரலாற்றில் இன்று - 05.03.2022 - சனி

நிகழ்வுகள் 2012 – மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர். 2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார். 2003 – கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1998 – இலங்கை தலைநகர் கொழும்பில் மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 04.03.2022 - வெள்ளி

நிகழ்வுகள் 2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர். 2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது. 2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. 2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது. யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். ஐரோ

வரலாற்றில் இன்று - 03.03.2022 - வியாழன்

நிகழ்வுகள் 2013 – கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர். 2005 – இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார். 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர். 1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான “ஆத்திரேலியா சட்டம் 1986” நடைமுறைக்கு வந்தது. 1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.