Skip to main content

Posts

Showing posts from January, 2022

வரலாற்றில் இன்று - 01.02.2022 - செவ்வாய்

1. 2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 2. 2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 3. 2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர். 4. 2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினைமுற்று

வினைமுற்று ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து முற்றுப் பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். • அது திணை பால் எண் இடம் காலம் காட்டும் பயனிலையாக வரும். • வேற்றுமை உருபை ஏற்காது. வினைமுற்று 6 வகைப்படும் 1) தெரிந்லை வினைமுற்று 2) குறிப்பு வினைமுற்று 3) உடன்பாடு வினைமுற்று 4) எதிர்மறை வினைமுற்று 5) ஏவல் வினைமுற்று 6) வியங்கோள் வினைமுற்று

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

வினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல் அ) வேர்ச்சொல் – (எ.டு) படி (ஆ) வினைமுற்று – (எ.டு) படித்தான் – (படி + த் + த் + ஆன்) (வினைமுற்றுப் பெற்றதை அறிவிக்கும்) (இ) வினையெச்சம்: (எ.டு) படித்து வந்தான் – (படி + த் + த் + உ) (‘உ’ என்ற விகுதியுடன் எஞ்சி நிற்கும் எச்சம் இரு வினைச் சொல்லைக் கொண்டு முடியும்)

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம். (எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும். நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும். நட +ப் + ப் + ஆன் நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம். (எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது? (அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின் வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல் அ – அந்த, சுக்கு, திப்பிலி, எட்டு ஆ – பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை இ – சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம் ஈ – அம்பு, குகை, இலட்சுமி, கடவுள், தா, ஈ,தேனீ, வண்டு,பாம்பு உ – சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு ஊ – உணவு, இறைச்சி, சிவன், உண்ணல் எ – எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி ஏ – அம்பு, விளி, இடைச் சொல்,எதிர்மறைப்பொருள், சிவன், திருமால் ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு,சிவன், தும்பை, பருந்து, வியப்பு

வரலாற்றில் இன்று - 31.01.2022 - திங்கள்

2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன. 2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். 2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 2000 – கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல் y> s NtWghL myk; - fyg;ig - msk; - cg;gsk; my; - ,Us; - ms; - ms;S my;yy; - Jd ;gk; ms;sy; - NrW ; ms;Sjy; ,yF - ,NyR ,sF – fiujy; ,yf;fk; - Fwpg;G ,sf;fk; - ,sfpa jd;ik ,yf;F – Fwp ,sf;F - ,sfr; nra; cyF – cyfk; csF – ahopd; Xh; cWg;G cyk; - jpuz;lfy; csk; - kzk; cy;yk; - xUtifkPd ; cs;sk; - kdk; cyT – cyhT csT – ufrpar nra;jp vy;yp - #hpad;>,Us; vs;sp - ,fo;e;J

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல் 1. Railway Station – புகைவண்டி நிலையம் 2. Financial Year – நிதியாண்டு 3. Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி 4. Judge – நீதிபதி, நீதியரசர் 5. Computer – கணினி, கணிப்பொறி 6. Xerox – ஒளிநகல் 7. Gold coin – பொற்காசு 8. Coffee Bar – குளம்பியகம் 9. Pesticides – பூச்சிக்கொல்லி 10. First Rank – முதல் தரம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பிறமொழிச் சொற்கள் நீக்கம்

பிறமொழிச் சொற்கள் - தமிழ் சொற்கள் 1. பஞ்சாங்கம் – ஐந்திறம் 2. அங்கத்தினர் – உறுப்பினர் 3. சந்தா – உறுப்பினர் கட்டணம் 4. இலாக்கா – துறை 5. பண்டிகை – திருவிழா 6. கேணி – கிணறு 7. அச்சன் – தந்தை 8. ஆய் – தாய் 9. மகசூல் – விளைச்சல் 10. வாடிக்கை – வழக்கம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வழூஉச் சொல் திருத்தம்

வழூஉச் சொற்களும் திருத்தங்களும் 1. கடகால் – கடைக்கால் 2. குடக்கூலி – குடிக்கூலி 3. முயற்சித்தார் – முயன்றார் 4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி 5. வென்னீர் – வெந்நீர் 6. எண்ணை – எண்ணெய் 7. உசிர் – உயிர் 8. ஊரணி – ஊருணி 9. சிகப்பு – சிவப்பு 10. புண்ணாக்கு – பிண்ணாக்கு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர் ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை. ஒருமை – பன்மை புத்தகம் – புத்தகங்கள் கால் – கால்கள் மனிதர் – மனிதர்கள் ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும். (எ.கா) ‘மாடு மேய்கின்றன’ என்ற சொற்றொடரில் மாடு ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது ‘மேய்கின்றன’ என்ற பன்மைப் பெயரைக் குறிக்கும். வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. ‘மேய்கிறது’ என்ற ஒருமைப் பெயரைக் குறிக்ககூடிய வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே மாடு மேய்கின்றன – தவறு மாடுகள் மேய்கின்றன – சரி மாடு மேய்கிறது – சரி

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - சந்திப்பிழை அறிதல்

சந்திப்பிழை அறிதல் வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும். வல்லினம் மிகும் இடங்கள் 1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ) குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன் பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான் நூலை + படி ₌ நூலைப்படி

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பொருந்தாச் சொல்

பொருந்தாச் சொல் தமிழில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டு வரையிலான நூல்கள் பெரும்பாலும் தொகுப்பு நூல்களாகவே உள்ளன. முச்சங்க நூல்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிருதிருமுறைகள், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவசித்தாந்த சாத்திரங்கள் என அனைத்தும் தொகுப்பு நூல்களே.  பொருந்தாச் சொல்லை இதில் மாற்றி அமைப்பார்கள். (1)காய்சின வழுதி (2) முடத்திருமாறன் (3)உக்கிரப் பெருவழுதி (4) நின்றசீர் நெடுமாறன் இதில் நின்றசீர் நெடுமாறன் தவிர மற்ற மூவரும் முச்சங்கங்கள் ஆதரித்த அரசர்கள்

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - எதிர்ச்சொல்

எதிர்ச்சொல் நல்வினை x தீவிணை வைதல் x புகழ்தல் வழுத்தல் x இகழ்தல் கீழ்த்திசை x மேற்றிசை நகை x அழுகை வலம்புரி x இடம்புரி மலர்தல் x கூம்பல் வெம்மை x தண்மை வல்லினம் x மெல்லினம் ஒற்றுமை x வேற்றுமை

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக தாமுள – தாம் + உள சரணாங்களே – சரண் + நாங்களே யாரவர் – யார் + அவர் அலகிலா – அலகு + இலா விருந்தொரால் – விருந்து + ஒரால் நிறையுடைமை – நிறை + உடைமை தற்பிறர் – தன் + பிறர் அறனல்ல – அறன் + அல்ல மொழியியல் – மொழி + இயல் முந்நூறு – மூன்று + நூறு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள் இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை இயற்கை தவம் – சீவகசிந்தாமணி இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம் இயற்கை அன்பு – பெரிய புராணம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் • அகத்தியர் – குறுமுனி •இளம்பூரணர் – உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் • நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர் • கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர் • திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்

வரலாற்றில் இன்று - 29.01.2022 - சனி

2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது. 1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் ஐம்பெருங்காப்பியங்கள் • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் (பௌத்த சமய நூல்) • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் • வளையாபதி – ஆசிரியர் (சமணசமய நூல); தெரியவில்லை • குண்டலகேசி – நாதகுத்தனார் (பௌத்த சமய நூல்)

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் 1. எழுவாய் பயனிலை அமைப்பு: எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும். நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள், அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன.

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - இலக்கணக் குறிப்பறிதல்

இலக்கணக் குறிப்பறிதல் தமிழ் இலக்கணம்  இலக்கணம் ஐந்து வகைப்படும்: 1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கிய வகைச் சொற்கள் இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடசொல் இயற்சொல்: கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல் 1. பெயர்ச்சொல்: பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும். 2. வினைச்சொல்: பொருட்களின் செயலை இயக்கத்தை தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும். 3.இடைச்சொல்: பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 -பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் அ – வரிசை  அணியர் – நெருங்கி இருப்பவர்  அணையார் – போன்றார்  அளைஇ – கலந்து  அகன் – அகம், உள்ளம்  அமர் – விருப்பம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்

தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள் 1. பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 2. பெயர்ச்சொல்லின் வகையறிதல் 3. இலக்கிய வகைச் சொற்கள் 4. இலக்கணக் குறிப்பறிதல்

TNPSC பொது தமிழ் புதிய பாடத்திட்டம் - TNPSC Group 4 & VAO EXAMINATIONS - New Syllabus 2022

TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம் பொதுத் தமிழ் ( கொள்குறிவகைத் தேர்விற்கு) - எஸ். எஸ். எல். சி - தரம் பகுதி அ: இலக்கணம்   CLICK HERE TO READ IN DETAIL   பகுதி ஆ: இலக்கியம்   CLICK HERE TO READ IN DETAIL   பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்) (கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்) பொது அறிவியல் நடப்பு நிகழ்வுகள் புவியியல் இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு இந்திய ஆட்சியியல் இந்திய பொருளாதாரம் இந்திய தேசிய இயக்கம் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்பொது அறிவு பகுதியை பொருத்தமட்டில் பழைய பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலகு 8, 9 என்று சொல்லக்கூடிய அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும் அலகு 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். என்ற இரண்டு அலகுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டு. TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கு உள்ளது போல், பொது அறிவு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதி

வரலாற்றில் இன்று - 27.01.2022 - வியாழன்

2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

வரலாற்றில் இன்று - 26.01.2022 - புதன்

2006 – வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. 2001 – குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1992 – ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.

வரலாற்றில் இன்று - 25.01.2022 - செவ்வாய்

2009 – முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது. 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 24.01.2022 - திங்கள்

2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,. 2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார். இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று - 23.01.2022 - ஞாயிறு

2018 – அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பெரும் சேதம் ஏற்படவில்லை. 2005 – திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர். 2003 – பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது. 2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில்

வரலாற்றில் இன்று - 22.01.2022 - சனி

2004ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் சமூக வலையமைப்பு ஆர்க்குட் (Orkut) தொடங்கப்பட்டது. 2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. 1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும்

வரலாற்றில் இன்று - 21.01.2022 - வெள்ளி

  2017 – அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். 2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 20.01.2022 - வியாழன்

2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார் 2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

வரலாற்றில் இன்று 19/01/2022- புதன்

  379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார்.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.

வரலாற்றில் இன்று 16/01/2022- SUNDAY

 கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது. 1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின்

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி  1559 : முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.   1759 : உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.   1799 : இலங்கையில் அடிமைகள்