Skip to main content

வரலாற்றில் இன்று - 23.01.2022 - ஞாயிறு


2018 – அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பெரும் சேதம் ஏற்படவில்லை.

2005 – திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.



2003 – பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது.

2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

1998 – யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

1996 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1973 – வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

1963 – கினி-பிசாவு விடுதலைப் போர் ஆரம்பமானது.

1958 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அதன் அரசுத்தலைவர் மார்க்கோசு சிமேனசு நாட்டை விட்டு வெளியேறினார்.

1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1950 – இசுரேலின் சட்டசபை எருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஆட்சிக்குட்பட்ட நியூ கினி மீதான சப்பானிய முற்றுகை ஆரம்பமானது.

1937 – லியோன் திரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

1924 – விளாதிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலைப் படைகள் வென்றன.


1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசு நிறுவப்பட்டது. எமிலியோ அகுயினால்டோ அதன் முதலாவது அரசுத்தலைவராகத் தெரிவானார்.

1874 – விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் உருசியாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1870 – அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 அமெரிக்கப் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர்.

1846 – தூனிசியாவில் அடிமை வணிகம் ஒழிக்கப்படட்து.

1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1816 – கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

1793 – உருசியாவும் புருசியாவும் போலந்தைப் பிரித்தன.

1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1719 – புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது.

1579 – நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1570 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.