Skip to main content

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி


2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.



2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

1984 – வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.

1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.

1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.

1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.

1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.

1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.

1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.

1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1871 – பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1855 – பனாமா கால்வாய் வழியே தொடருந்து ஒன்று அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை முதல் தடவையாகச் சென்றது.

1846 – இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.

1754 – சேரந்தீவம் என்ற சொல்லை முதல் தடவையாக சேர் ஒராசு வால்போல் பயன்படுத்தினார்.

1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.

1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.

1671 – பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.

1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.

1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார்.

1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது.

814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.