Skip to main content

வரலாற்றில் இன்று - 17.02.2022 - வியாழன்

2016 – துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர்.

2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.

2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.



2008 – கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர்.

2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.

1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.

1996 – நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது.

1995 – பெருவுக்கும், எக்குவதோருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஐநா முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் கரதாக்லி நகர ஊடுருவலில் 20 இற்கும் அதிகமான அசர்பைசானியரைக் கொன்றனர்.

1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1982 – இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.

1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.

1978 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.

1964 – காபொனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் லேயொன் உம்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1957 – மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.

1948 – இலங்கை, காலியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

1947 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பித்தது.

1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302,500, யாழ்ப்பாணத்தில் 40,057 ஆகக் கணக்கெடுக்கப்பட்டது.

1871 – பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது.

1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1863 – ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.

1854 – ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.

1838 – தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர்.

1788 – லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.

1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.

1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...