- யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
- சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் மற்றும் தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
- ரஷ்ய ஏவுகணைகள், யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார்.
- அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய கூட்டணி நாடான செச்சினியாவின் அரசாங்க இணையதளத்தை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, யுக்ரைனுக்குள் ரஷ்யாவுடன் இணைந்து தங்கள் படை வீரர்களை செச்சினியா நாடு அனுப்ப உள்ளதாக அறிவித்த 12 மணி நேரத்திற்கு பிறகு நடந்துள்ளது.
- மேற்கு கீயவில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த போரில் உயிரிழந்தவர்களில் இச்சிறுவன் தான் வயதில் குறைந்த நபர்.
Comments