பெரிய புராணம் ஆசிரியர் குறிப்பு: பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார் இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர் இவர் அநாபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர். இவர் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவரைத் தெய்வ சேக்கிழார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவிலும் எழுப்பினர். நூற்குறிப்பு: தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார். அவ்வடியார்கள் வரலாற்றை கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் எனும் பெயர் பெற்றது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர் திருத் தொண்டர் புராணம் தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்டதெனவும் கூறுவர். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையவன. எனவே தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்,பக்திச்சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங...