Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம்
குற்றாலக் குறவஞ்சி
  • ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்
  • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.
  • இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும்.
முக்கூடற்பள்ளு

ஆசிரியர் குறிப்பு:
  • இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர்.
  • சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.

அம்மானை

ஆசிரியர் குறிப்பு
  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார்.
  • ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயராகும்
  • தாண்டவமூர்த்தி என்பவர்க்கு மகனாக பிறந்தார்.
  • இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார்.
  • இவர் திருவாடுதுஐற ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.
  • ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு
  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • கலம்பகம் – கலம் + பகம் எனப் பிரியும், கலம் – பன்னிரண்டு, பகம் – ஆறு ஆக பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.
  • பல்வகையான பா வகைகளும் கலந்திருந்தலால் இந்நூல் கலம்பகம் எனவும் பெயர் பெற்றது.
  • பதினெண் உறுப்புகளில் ஒன்றாகிய அம்மானை என்னும் பகுதி ஈண்டு பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

தமிழ்விடு தூது
  • தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் தூதும் ஒன்று.
  • கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்
  • மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்க நாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது
  • விடுவதாகப் பொருளமைந்தது தமிழ்விடு தூது.
  • இதனை இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை.
அழகர்கிள்ளைவிடு தூது
  • ஆசிரியர் பலபட்டை சொக்கநாதபிள்ளை
  • 18 ஆம் நூற்றாண்டினர்; மதுரையைச் சேர்ந்தவர்.
  • சைவரான சொக்கநாதப்பிள்ளை வைணவக் கடவுள் மீது பாடிய நூல்
  • கிளியின் பெருமை – அழகரின் பெருமை – அழகர் உலா வருதல் – தசாங்கம் – ஊர்த்திருவிழா – தலைவிநிலை – கிளியை வேண்டுதல் – கோயில் பணியாளர் – தூது உரைக்கும் முறை – தூதுச் செய்தி – மாலை வாங்கிவா என இதன் பொருள் அமைப்பு உள்ளது.
“வேளாண்மை எனும் விளைவிற்கு நின் வார்த்தை
கேளாதவர்காண் கிள்ளையே”.
“மாலினைப்போல மகிதலத்தோர்வாட்டமற
பால் அ(ன்)னத்தாலே பசி தீர்ப்பாய்”

நந்திக் கலம்பகம்

ஆசிரியர் குறிப்பு:

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை.

நூற் குறிப்பு:
மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம். ஆதலின் நந்திக் கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
கலம்+பகம் – கலம்பகம். கலம் – பன்னிரண்டு பகம் – ஆறு, பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.

ஆசிரியர் குறிப்பு:
  • இயற்பெயர் – ஒட்டக்கூத்தர்
  • சிறப்புப் பெயர் – கவிச்சக்கரவர்த்தி
  • சிறப்பு – விக்கிரமசோழன்
  • இரண்டாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
இயற்றிய நூல்கள்:
        1. மூவருலா
        2. தக்கயாகப்பரணி
        3. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
        காலம் – பன்னிரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:
  • உலா என்பது தொண்ணூற்று சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • இறைவன் மன்னன் மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகைச் சிற்றிலக்கியங்கள் எழுதப் பெற்றுள்ளன.
விக்கிரமசோழன் உலா:
  • ஒட்டக்கூத்தர் எழுதிய மூவர் உலாவில் ஒன்று.
  • முதற்குலோத்துங்கனின் நான்காவது மகன் விக்கிரமசோழன். இவன் தாய் மதுராந்தகி ஆவார்.
  • 12 ஆம் நூற்றாண்டு
  • விக்கிரம சோழனின் முன்னோர்களைப் பட்டியலிட்டுக் கூறும் வரலாற்று ஆவணநூல்.
  • குடகுமலையை ஊடறுத்துக் காவிரியாற்றைக் கொணர்ந்தவன் கவேரன்.
  • மேருமலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டியவன் கரிகாலன்.
  • காவிரியின் கரைகளை உயர்த்தின் கட்டியவன் கரிகாலன்.
  • பொய்கையாரின் களவழி நாற்பதிற்காகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையை
  • விடுதலை செய்தவன் செங்கணான்.
  • போரில் 96 விழுப்புண்களைப் பெற்றவன் விஜயாலயன்.

நூற்செய்திகள்
  • சோழமன்னர்களின் வழிமுறை செய்த போர்கள், அடைந்த வெற்றி, அளித்த கொடை பற்றிக் கூறுகிறது.
  • இராஜராஜன் கருநிறத்தவன் அவன் பட்டத்து அரசி புவனமுழுதுடையாள்.
  • இராஜராஜனுக்கு வரராசன், கண்டன், சனநாதன் என்ற பட்டப் பெயர்களும் விளங்கின.
  • அரசன் பெரும்பாலும் பாசறையிலேயே இருந்தால் “அயிற்படை வீரன்” எனச் சிறப்பிக்கப்படுகிறான்.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் – குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
  • திருப்பனந்தாலிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனது திருவடியடைந்தார்.
நூல் குறிப்பு:
  • தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ்
  • இறைவனையே நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ்
  • பத்துப் பருவங்கள் அமைத்துப் பருவத்திற்கு பத்து பாடலென நூறு பாடலால் பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்பாடுகளை எடுத்து இயம்புவது பிள்ளைத்தமிழ்
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
  • பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற்பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை.
  • இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும் அம்மானை கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.
  • புள்ளிருக்குவே@ரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானின் பெயர் முத்துக் குமாரசுவாமி அவர் மீது பாடப்பட்டமையால் இது முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப் பெயர் பெற்றது.
  • குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது வருகை பருவம் ஆகும்.
  • முத்தொள்ளாயிரம்
நூல் குறிப்பு:
  • முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாக நூற்றெட்டு வெண்பாக்களும் பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக இருபத்திரண்டு வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
  • மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
முத்தொள்ளாயிரம்

பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு.

கலிங்கத்துப் பரணி

ஆசிரியர் குறிப்பு:
  • கலிங்கத்துப்பரணி இயற்றியவர் சயங்கொண்டார்
  • இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர்.
  • இவர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அரசவை புலவராகத் திகழ்ந்தவர்.
  • பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
  • இசையாயிரம் உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
  • ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்பது பெயர்.
  • இது தொன்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி.
  • குலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர் தொடுத்து வெற்றிப் பெற்றான்.
  • அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்து உள்ளது.
  • இந்நூலில் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
  • சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
கலிங்கத்துப்பரணி

1. தீயின் வாயினீர் பெறினு முண்பதோர்
சிந்தை கூரவாய் வெந்து லர்ந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே. – சயங்கொண்டார்

பரணி இலக்கியங்கள்:

1. தக்கயாகப் பரணி
2. இரணியன் வதைப் பரணி
3. புhசவதைப் பரணி
4. மோகவதைப் பரணி
5. வங்கத்துப் பரணி
6. திராவிடத்துப் பரணி
7. சீனத்துப் பரணி
8. திருச்செந்தூர் பரணி (சூரன் வதைப் பரணி)
நந்திக்கலம்பகம்
  • மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் மீது பாடப்பட்ட கலம்பக நூல்
  • ஆசிரியர் பெயரை இதுவரை அறியமுடியவில்லை
  • நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த நால்வரில் ஒருவர் என்று சிலர் கூறுகின்றனர்.
  • காலம் 9 ஆம் நூற்றாண்டு
  • கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகையின் முதல் நூல். (கலம்பகம் குறித்த செய்திகளை இந்நூலில் பக்கம்-ல் காண்க.)
  • வரலாற்றுக் குறிப்புகள் மிகுந்த கலம்பக நூல்
திருவேங்கடத்தந்தாதி
  • ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  • 12, 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
  • ஊர் திருமங்கை
  • இராமாநுசரின் சீடரான திருவரங்கத்து அமுதானரின் பேரன்
  • கூரத்தாழ்வாரின் மகனான பராச்சரப்பட்டரின் சீடர் என்பர்.
  • ஆராய்ச்சியாளர்கள் 17 ஆம் நூற்றாண்டு என்பர்.
  • திருமலைநாயக்கரின் அரண்மனையில் எழுத்தராகப் (ராயசம்) பணிபுரிந்தவர்.
  • இவர் பாடிய அட்டப்பிரபந்தத்துள் ஒன்று திருவேங்கடத்தந்தாரி.
  • 96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி.
  • அட்டபிரபந்தங்கள்: 1. திருவரங்கத்தந்தாதி 2. திருவேங்கடத்தந்தாதி 3. திருவேங்கட மலை 4. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி 5. அழகர் அந்தாதி 6. திருவரங்கத்து மாலை 7. திருவரங்கக் கலம்பகம் 8. ஸ்ரீரங்க நாயகர் ஊசல் ஆகியன.
விதுரனைத் தூதுவிடல்

தம்பிவிதுரனை மன்ன னழைத்தான்;
தக்க பரிசுகள் கொண்டினி தேகி
எம்பியின் மக்க ளிருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடியிங் கெய்தி விருந்து களிக்க
நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதோர் நுந்தை யெனவுரை செய்வாய்.

குயில்பாட்டு
  • ஆசிரியர் பாரதியார்
  • பாரதியின் முப்பெரும் பாடல்களுள் ஒன்று
  • இது ஒரு குறுங்காவியம்
  • 1914-1915 காலத்தில் எழுதப்பட்டது

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.