Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - புராண இலக்கியங்கள்

பெரிய புராணம்


ஆசிரியர் குறிப்பு:
  • பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர்
  • இவர் அநாபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர்.
  • இவர் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவரைத் தெய்வ சேக்கிழார் என்றும் போற்றுவர்.
  • இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு
  • சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவிலும் எழுப்பினர்.
நூற்குறிப்பு:
  • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார்.
  • அவ்வடியார்கள் வரலாற்றை கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் எனும் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர் திருத் தொண்டர் புராணம்
  • தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்டதெனவும் கூறுவர்.
  • இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையவன.
  • எனவே தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்,பக்திச்சுவைநனி சொட்டச்
  • சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
  • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்பார் திரு.வி.கலியாண சுந்தரனார்.
சீறாப்புராணம்
ஆசிரியர் குறிப்பு:
  • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்
  • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்
  • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
  • நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
  • அவருக்குப் பின் அபுல்காசின் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
  • உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.
  • இவர் என்பது பாக்களால் ஆகிய முதுமொழி மாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
  • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
நூற் குறிப்பு:
  • இறைவனின் திருந்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும்
  • இனிய நூல் சீறாப்புராணம்.
  • சீறா – வாழ்க்கை புராணம் – வரலாறு என பொருள்படும்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம், என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.
  • பாடப்பகுதி விலாதத்துக் காண்டத்தில் உள்ளது.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஆசிரியர் குறிப்பு:
  • கேரளா மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகரப் பெருமாள்
  • இராமபிரானிடம் பக்தி மிகுதியாக வாய்க்கப் பெற்ற காரணத்தால் இவர்
  • குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்பட்டார்.
  • இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்.
  • இவர் அருளிய திருவாய்மொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் ஒன்று.
  • இதில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
  • இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
  • குலசேகரர் திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால் அதற்கு குலசேகரன்
  • வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
  • இவரது காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.
நூற் குறிப்பு:
  • தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம்
  • வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும்.
  • பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
“மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே”.
– குல சேகர ஆழ்வார்
தேம்பாவணி
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் – வீரமாமுனிவர்
  • இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி – எலிசபெத்
  • பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் – இத்தாலியம் இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம்.
  • தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
  • சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை
இயற்றிய நூல்கள்
        1. ஞானோபதேசம்
        2. பராமார்த்த குருகதை
        3. சதுரகராதி
        4. திருக்காவலூர்க் கலம்பகம்
        5. தொன்னூல் விளக்கம்
        காலம் – 1680 – 1747

நூல் குறிப்பு:
  • தேம்பாவணி – தேம்பா + அணி – வாடாதமாலை தேம்பாவணி தேம்  பா  அணி –
  • தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை.
  • இந்நூல் கிறித்தவச் சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.
  • இந்நூலில் மூன்று காண்டங்களும் முப்பத்தாறு படலங்களும் உள்ளன. பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து.
  • வில்லிபாரதம் – வில்லிபுத்தூரார்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் – வில்லிப்புத்தூரார்
  • தந்தையார் – வீரராகவர்
  • ஆதரித்தவர் – வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்.
  • காலம் – பதினான்காம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
  • வில்லிபாரதம் பத்து பருவம் கொண்டது.
  • நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது.
  • திருவிளையாடற் புராணம்
ஆசிரியர் குறிப்பு:
  • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்
  • இவரின் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவார்.
  • பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
  • மதுரை நகரினை அடைந்து மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர், அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
  • அந்நகரத்தார் அவரைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார்.
  • அந்நூலைச் சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி தென்மொழிப் புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
  • திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் (திருமறைக்காட்டுப் புராணம்) என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றியுள்ளார்.
நூல் குறிப்பு:
  • திருவிளையாடற் புராணம் கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.
  • இந்நூல் மதுரைக்காண்டம் (பதினெட்டுப் படலம்) கூடற்காண்டம் (முப்பது படலம்) திருவாலவாய் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
  • இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று விருத்தப்பாக்கள் உள்ளன.
  • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளக்குகின்றன.
  • இந்நூல் இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுள் வரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
  • தொடைநயமும் பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்குப் பண்டிதமணி ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய பிற நூல்கள்:
1. செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (வேம்பத்தூர் திருவிளையாடற் புராணம்)
2. தொண்டை நாட்டு இளம்பூர் வீமநாதப் பண்டிதரின் கடம்பவன புராணம்
3. தொண்டைநாட்டு வாயற்பதி அன தாரியப்பனின் சுந்தரபாண்டியன்.

திருவிளையாடற் புராணம்:
  • புராணம் என்றால் வரலாறு என்று பொருள்
  • சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூல்
  • இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றி முதன் முதலில் கூறிய கல்லாடம் சுந்தரபாண்டியம்
  • கல்லாடத்தின் ஆசிரியர் கல்லாடர் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே’ என்பது பழமொழி
  • முதன் முதலில் (13 நூற்றாண்டு) திருவிளையாடற் புராணம் பாடியவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி
  • இவர் பாடிய திருவிளையாடற் புராணம் திருவாலாவாய் உடையார்
  • திருவிளையாடற் புராணம் என்று அழைக்கப்படுகிறது.
  • அடுத்துத் திரு விளையாடற் புராணம் எழுதியவர் பரஞ்சோதி முனிவர்
  • இவர் ஊர் திருமறைக்காடு
  • காலம் 16 ஆம் நூற்றாண்டு
  • பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணமே புகழ்பெற்றது.
  • பரஞ்சோதி திருவிளையாடல் என்றே அழைக்கப்படுகிறது.
  • இது சொக்கர் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலைக் கூறுகிறது.
  • பரஞ்சோதியின் திருவிளையாடற் புராணம் மூன்று காண்டம் (மதுரை, கூடல், திருவாலவாய்) 68 படலம், 3363 பாடல்களைக் கொண்டது.
  • இப்புராணங்கள் ஆலாஸ்ய மகாத்மியம் என்ற வடமொழி நூலின் தழுவல்கள் ஆகும்.


Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.