Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள்

  • காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்.
  • காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.
ஐம்பெருங்காப்பியங்கள்
  • ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை.
  • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  • மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார்
  • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  • வளையாபதி -பெயர் தெரியவில்லை
  • குண்டலகேசி – நாதகுத்தனார்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
  • சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்
  • மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.
  • குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி
  • நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்)
1. சிலப்பதிகாரம்

நூற் குறிப்பு:

  • சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
  • சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,
  • வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக் காண்டம் பதின்மூன்று
  • காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது.
  • இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
  • முதற் காப்பியம், இரட்டைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.
  • ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்
  • ஆசிரியர் இளங்கோவடிகள்
  • இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் குடவாயிற் கோட்டம் என்ற ஊர்.
  • குடவாயிற் கோட்டம் சேர நாட்டு ஊர்
  • மூன்று காண்டம் முப்பது காதை
  • காதை – கதை பொதிந்துள்ள பாட்டு
  • புகார் காண்டம்: மங்கல வாழ்த்துப் பாடல் முதல் நாடுகாண் காதை வரை உள்ள 10 காதைகள்
  • மதுரைக் காண்டம்: காடுகாண் காதை முதல் கட்டுரைக் காதை வரை உள்ள 13 காதைகள்
  • வஞ்சிக் காண்டம்: குன்றக் குரவை முதல் வரந்தருகாதை உள்ள 13 காதைகள்
  • சிலப்பதிகாரம் ஆசிரியப் பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.

ஆசிரியர் குறிப்பு:

  • இளங்கோவடிகள் சேர மரபினர்
  • இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை
  • இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்
  • இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
  • அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
  • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
சிலம்பின் புகழ்:
            “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
                மணியாரம் படைத்த தமிழ்நாடு” – பாரதியார்
            “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் … தமிழ்ச்
            சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி
            கொண்டிருந்தேன்” – பாரதியார்
        “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்  
        வள்ளுவனைப் போல் இளங்கோவனைப் போல்
        பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” – பாரதியார்
  • “தமிழ் கூறும் நல் உலகம்” என்று மூன்று நாடுகளையும் ஒருங்கே காணும் தன்மை தொல்காப்பியத்தில் உண்டு. ஆனால் சங்க இலக்கியத்தில் இல்லை.
  • “முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள் – மு.வரதராசனார்.
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து முதலில் பாடியவர் இளங்கோவடிகள்
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து இணங்கோவடிகளை அடுத்துப் பாடியவர் மாணிக்கவாசகர்;
  • சைவ வைணவ நெறிகளையும் பாடிய சமணநூல் சிலப்பதிகாரம்
  • முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம்
  • முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம்
  • இரண்டாவது தமிழ் தேசிய காப்பியம் பெரிய புராணம்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
  • சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
முக்கிய கதை மாந்தர்கள்:
  • தலைவன் கோவலன்
  • தலைவி கண்ணகி (சங்க காலத்துக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் மனைவி பெயரும் கண்ணகி)
  • ஆடல் மங்கை மாதவி
  • கோவலன் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
  • மாதவியின் தாய் சித்திராபதி
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
  • கண்ணகியின் தோழி தேவந்தி (இவள் ஓர் அந்தணப் பெண் இவள் கணவன் பாசண்ட சாத்தன்)
  • மாதவியின் தோழி வயந்தமாலை
  • பெண் சமணத்துறவி கவுந்தியடிகள்
  • ஆண் பௌத்தத் துறவி அறவண அடிகள்
செய்திகள்:
  • சிலம்பின் குறிக்கோள் மூன்று
  • கோவலன் – மாதவி பிரிவுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் மதுரை சென்றதுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்
  • மதுரை எரிந்ததற்குக் காரணம் ஊழ் என்று இளங்கோவடிகள் கருதுகிறார்.
  • இளங்கோவடிகளுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • கண்ணகியின் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் எழுத வேண்டும் என்று சொன்னவர் இளங்கோவடிகள்
  • கண்ணகியின் வரலாற்றை எழுதத் தகுதியுடையவர் இளங்கோவடிகளே என்று சொல்லி அவரே எழுத வேண்டும் என்று சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.
  • இளங்கோவடிகள் தம் நூலைச் சீத்தலைச் சாத்தனார் முன் அரங்கேற்றினார்.
2. மணிமேகலை
  • ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்
  • காலம் 2 ஆம் நூற்றாண்டு
  • இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு
  • பௌத்த காப்பியம்
  • தமிழன் இரண்டாம் காப்பிய நூல்
  • சமய பூசலுக்கு வித்திட்ட நூல்
  • துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
  • பெண்ணின் பெருமை பேசும் நூல் (சிலப்பதிகாரம் போன்று)
  • சங்க இலக்கியம் இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தது திருக்குறள் இல்லறம் துறவறம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்தது மணிமேகலை துறவுக்கு முதன்மை கொடுத்தது.
நூல் அமைப்பு:
  • காண்டப் பிரிவுகள் இல்லை
  • 30 காதைகள் உள்ளன
  • முதல் காதை விழாவறைக் காதை
  • இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
  • முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.
  • 27-வது சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை மட்டும் இணைக் குறள்
  • ஆசிரியப்பாவாலானது மற்றவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள்
ஆசிரியர் குறிப்பு:
  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
  • கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
  • இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
  • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
  • இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
  • தண்டமிழ் ஆசான் சாத்தன் தன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாராகப் பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

நூற்குறிப்பு:
  • மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் இந்நூலுக்கு மணிமேகலையைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
  • இந்நூல் சொற்சுவையுமம் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பௌத்த மதச் சார்புடையது.
  • முப்பது காதைகளைக் கொண்டது
  • முப்பது காதைகளுள் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை இருபத்து நான்காவது காதை.
கதை மாந்தர்:
  • மணிமேகலையின் தோழி சுதமதி கண்ணகியின் தோழி தேவந்தி
  • ஆதிரையின் கணவன் சாதுவன்
  • மணிமேகலைக்கு முதன்முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் ஆதிரை
  • ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் காய சண்டிகை
  • விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் காய சண்டிகை
  • காய சண்டிகையின் பசிநோயைப் போக்கியவள் மணிமேகலை
  • மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்ற தெய்வம் மணிமேகலாத் தெய்வம்
  • மணிமேகலாத் தெய்வம் மணிமேகலைக்குக் கொடுத்த வரம் மூன்று
  • ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்தது சிந்தாதேவி
  • அமுதசுரபியைக் கோமுகியில் இட்டவன் ஆபுத்திரன்
  • அமுத சுரபி பற்றி மணிமேகலைக்குச் சொன்னது தீவதிலகை
இடங்கள்:
  • மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
  • மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
  • மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட ஊர் வஞ்சி மாநகரம்
  • பூம்புகாரில் உள்ள சோலைகள் : இலவந்திகை, உய்யாவனம், உவவனம், கவேரவனம், சம்பாதிவனம்
  • மணிமேகலை பூக்கொய்யச் சென்ற வனம் உவவனம்
  • மணிபல்லவத்தில் இருந்த பீடிகை புத்தபீடிகை
  • அமுத சுரபி இருந்த இடம் கோமுகி
  • அமுத சுரபிக்கு வேறு பெயர் அட்சய பாத்திரம்
செய்திகள்:
  • சம்புத் தீவின் தெய்வம் சம்பு
  • சம்புத் தீவிற்கு நாவலந்தீவு என்ற வேறுபெயரும் உண்டு
  • நாவலந்தீவு என்பது இந்தியா
  • சம்பாபதி புகார் நகரத்திற்குக் காவிரி பூம்பட்டினம் என்று பெயர் அளி;த்தது.
  • முதன்முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
  • இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்.
  • மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
  • பூம்புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததாக சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டு நூல்களும் கூறுகின்றன.
மூவகைப் பத்தினிப் பெண்டிர்
            1. உடன் எரி மூழ்குவர்
            2. தனிஎரி மூழ்குவர்
            3. கைம்மை நோன்பு நோற்பார்
உடல் அடக்க முறை ஐந்து
            1. சுடுதல்
            2. வாளா இடுதல்
            3. தோண்டிப்புதைத்தல்
            4. பள்ளத்தில் அடைத்தல்
            5. தாழியில் கவிழ்தல்
தீயவை பத்து
            1. கொலை 2. களவு 3. காமம்
            4. பொய் 5. குறளை 6. கடுமொழி
            7. பயனில் சொல் 8. வெஃகல் 9. வெகுளல்
            10. பொல்லாக்காட்சி

3. சீவக சிந்தாமணி

  • ஆசிரியர் திருத்தக்க தேவர்
  • காலம் 9 ஆம் நூற்றாண்டு. கருத்து வேறுபாடு உண்டு.
  • திருத்தக்க தேவர் நிலையாமை குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்
  • விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
  • சமணக் காப்பியம்
  • மணநூல், காமநூல்,முக்தி நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • வட மொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி
  • காண்டப் பிரிவு இல்லை
  • 13 இலம்பகங்களையும் 3145 பாடல்களையும் கொண்டது.
  • முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்
  • காப்பியத் தலைவன் சீவகன்
  • சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
  • சிந்தாமணி என்பது கேட்டதைக் கொடுக்கும்
  • தேவலோகத்தில் உள்ள ஒரு மணி (ரத்தினம்)
  • சீவகனின் தந்தையான சச்சந்தனைக் கொன்றவன் கட்டியங்காரன்
  • சீவகன் பிறந்த இடம் சுடுகாடு
  • சீவகனை எடுத்து வளர்த்தவன் கந்துக்கடன் என்னும் வணிகன்
  • சீவகனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் அச்சணந்தி
  • திருத்தக்கதேவர் சோழர்குலத்தில் பிறந்தவர் இவர்.
  • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
  • இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம் ஆகும்.
நூல் குறிப்பு:
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி
  • இந்நூலின் கதைத் தலைவன் சீவகன்
  • அவன் பெயரை இணைதத்துச் சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றது என்பர்.
  • இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.
சிறப்பு:
  • அனைத்துச் சமயத்தவரும் விரும்பிக்கற்ற சமணக் காப்பியம்
  • சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிக்கற்ற காப்பியம்
  • நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.
  • இவர் இருமுறை உரை எழுதினார் என்பர்
  • சைவரான உ.வே.சா. அவர்கள் முதன் முதலில் பதிப்பித்தார்.
  • அவர் பதிப்பித்த முதல் நாலும் சீவகசிந்தாமணியே ஆகும்.
  • கிறித்துவரான ஜி.யு.போப் இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.
4. வளையாபதி
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சமணக் காப்பியம்
  • விருத்தப்பாவால் ஆனது
  • முழுமையாகக் கிடைக்கவில்லை
  • கிடைத்தவை 72 பாக்கள்
  • மூல நூல் வைசிக புராணம் 35 வது சுருக்கம்
  • நவகோடி நாராயணன் பற்றிய நூல்
  • மடலேறுதல் பற்றிக் கூறும் காப்பிய நூல்
  • ஒட்டக் கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கயாகப்
  • பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.சிறப்பு
  • இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்

5. குண்டலகேசி
  • ஆசிரியர் நாதகுத்தனார்
  • காலம் 7 ஆம் நூற்றாண்டு
  • பௌத்த காப்பியம்
  • சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்
  • குண்டலகேசி விருத்தம் அகல கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
  • கிடைத்தவை 224 பாடல்கள்
  • குண்டல கேசியின் வரலாற்றை நீலகேசி கூறுகிறது
  • குண்டல கேசியின் இயற்பெயர் பத்திரை
  • இராசகிருக நாட்டு மந்திரியின் மகள்
  • குண்டலகேசியின் கணவன் காளன் இவன் ஒரு கள்வன்
  • குண்டலகேசி சாரிபுத்தரிடம் தோற்றுப் புத்தமதம் தழுவினாள்
  • கலைஞரால் ‘மந்திரி குமாரி’ என்று திரைப்படமாக்கப்பட்டது.
5(அ). ஐஞ்சிறு காப்பியங்கள்
  • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களே
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது
  • சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.
  • ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் ச.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.
  • நாக குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
  • உதயண குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
  • யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள் நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை
  • சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் கந்தியார்

1. நாககுமார காவியம்
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தயார் ஒருவர் எழுதினார் என்பர்.
  • நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்
  • இந்நூலுக்கு நாகபஞ்சமி கதை என்ற வேறுபெயரும் உண்டு
  • இராசகிரியில் உள்ள விபுலி மலையில் வீற்றிருக்கும் வர்த்தமான மகாவீரரை வணங்குவதற்குச் சிரேணிக மாமன்னனும் அவன் தேவியாகிய சாலினியும் சென்றனர். அக்கோயிலில் இருந்த தவ முனிவராகிய கௌதமர் அவர்களுக்கு நாககுமாரனது கதையை எடுத்துரைக்கிறார்.
  • மணத்தையும் போகத்தையும் மிகுதியகாகக் கூறும் சமண நூல்
2. உதயணகுமார காவியம்
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தியார் என்பர்.
  • மூலநூல் பெருங்கதை
  • காண்டங்கள் 6,விருத்தப்பாக்கள் 369
            1. உஞ்சைக் காண்டம் 2. இலாவண காண்டம்
            3. மகதகாண்டகம் 4. வத்தவ காண்டம்
            5. நரவாகன காண்டம் 6. துறவுக் காண்டம்
  • பெருங்கதையின் முதற்பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. முழுக் கதையையும் அறிய இந்நூல் துணைபுரிகிறது.
  • உதயணன் குலம் குருகுலம்
  • பெற்றோர் சதானிகன்ää மிருகாபதி
  • நாடு வத்தவ நாடு
  • தலை நகரம் கோசாம்பி
  • சூரிய உதயத்தில் பிறந்ததால் உதயணன் எனப்பட்டான்.
  • உதயணனுக்கு ‘விச்சை வீரன்’ என்ற வேறு பெயரும் உண்டு
  • விச்சை வீரன் என்றால் பலகலை வல்லவன் என்று பொருள்
  • உதயணனைச் சிறைப்படுத்தியவன் உச்சியினி மன்னன் பிரச் சோதனன்
  • உதயணன் யாழின் பெயர் கோடபதி
  • இவன் அமைச்சன் பெயர் யூகி (நண்பனும் ஆவான்)
  • உதயணனுக்கு நான்கு மனைவியர்
3. யசோதர காவியம்
  • ஆசிரியர் வெண்ணாவலூர் உடையார்வேள்
  • சருக்கம் 5, பாடல்கள் 320
  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தர் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
  • உயிர்க்கொலை தீது என்று உணர்த்தும் நூல்
  • நல்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் இம்மூன்றும் மும்மணிகள்
  • ஏழுவகை நரகங்கள் கூறப்படுகின்றன அவை.
            1. இருளில் இருள் 2. இருள்
            3. புகை 4. சேறு 5. மணல்
            6. பரல் 7. மருள்

4. நீலகேசி
  • நீலகேசி என்றால் கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சருக்கம் 10 (பதிகவுரைச் சருக்கம் நீங்கலாக)
  • பாடல்கள் 894
  • நீலகேசித் தெருட்டு என்ற வேறு பெயரும் உண்டு
  • சமண முனிவர் முனிச் சந்திரனை நீலி என்ற பெண் அச்சுறுத்தி மயக்க முயல்கிறாள். மயங்காத முனிவர் அறிவுரை கூற, அவள் திருந்தி சமணமதத்தை ஏற்றுப் பிற சமய வாதிகளை வெற்றி கொள்கிறாள்.
  • சமணம் அல்லாத பிற இந்திய சமயங்கின் கோட்பாடுகளைத் தருக்க முறையில் மறுத்துரைக்கும் நூல்
  • குண்டலகேசி என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் நீலகேசி
  • உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர். இவ்வுரைக்குச் சமய திவாகர விருத்தி என்ற பெயரும் உண்டு
5. சூளாமணி
  • ஆசிரியர் தோலா மொழித்தேவர். இயற்பெயர் வர்த்தமான தேவர்
  • சருக்கம் 12 விருத்தப்பாக்கள் 2330
  • காப்பியத் தலைவன் உலகின் முடிக்கோர் சூளாமணி ஆயினான் என்பதால்
  • சூளாமணி என்று பெயர் பெற்றது. (பலமுறை வருதல்)
  • முதல் நூல் வட மொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • இதன் கதை ஸ்ரீ புராணத்திலும் உள்ளது.
  • சுரமை நாட்டு மன்னன் பயாபதி
  • பயாபதியின் மக்கள் மூவர்.
            1. திவிட்ட நம்பி (கண்ணன் அவதாரம்)
            2. விசய நம்பி (பலராமன் அவதாரம்)
            3. மகள் சோதிமாலை

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.