Skip to main content

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு


2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது.



2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.

1995 – அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை வெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.

1979 – அமெரிக்காவின் வாரிக் போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து புறப்பட்டு 30 நிமிடத்தில் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது.

1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

1972 – பாக்கிஸ்த்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.

1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1959 – ஆன்சு எட்டொஃப்ட் என்ற பிரித்தானியக் கப்பல் தனது முதலாவது பயணத்தில் பனிமலை ஒன்றுடன் மோதி மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.

1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.

1948 – லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அம்போன் சமரில், சப்பானியப் படைகள் டச்சுக் கிழக்கிந்தியாவின் அம்போன் தீவைத் தாக்கி 300 கூட்டுப் படைகளின் போர்க்கைதிகளை கொன்றன.

1933 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1930 – குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.

1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1889 – ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

1820 – எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.

1789 – தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன.

1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.

1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.

1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள்.

1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]

1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின.

கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...