Skip to main content

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்


2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.
1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.
1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.
1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் “மெல்பேர்ன்” என்ற விமானந்தாங்கிக் கப்பலும் “வொயேஜர்” என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.
1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.
1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.
1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.
1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.
1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.
1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.
1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.