Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

உயிர் எழுத்துக்கள் - 12 (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள)

ஆய்த எழுத்து - 1 (ஃ)

மெய்யெழுத்து மற்றும் அதன் வர்க்கம்

க், ங், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

க, ங, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன


உயிர் எழுத்துக்களை முதலில் வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம் 
        - ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை
மெய்யெழுத்துக்களை முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்தாக வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை - தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம்

உயிர் மெய் எழுத்துக்களை க, கா, கி, கீ என வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

கோமாளி, காலை, கலை, கொக்கு 
        - கலை, காலை, கொக்கு, கோமாளி

எழுத்துக்களை க, ங, ச என்ற முறையில் வரிசைப்படுத்தக் கூடாது.

மேலும் பல எடுத்துக்காட்டுகள்

திரை, தளிர், துறைமுகம், தாமரை, தீமை 
        - தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்

கொல்லன், காவலன், அரசன் 
        - அரசன், காவலன், கொல்லன்

பச்சை, பட்டம், பங்கு, பஞ்சு 
        - பங்கு, பச்சை, பஞ்சு, பட்டம்

நிதி, நான்கு, நட்பு, நேற்று 
        - நட்பு, நான்கு, நிதி, நேற்று

உழும், ஆடும், அடும் 
        - அடும், ஆடும், உழும்

மீன், முத்து, மாங்காய், மச்சம் 
        - மச்சம், மாங்காய், மீன், முத்து

காட்சி, பேறு, தெய்வம், உழைப்பு 
        - உழைப்பு, காட்சி, தெய்வம், பேறு

சௌக்கியம், சுக்கு, சங்கு, சொல் 
        - சங்கு, சுக்கு, சொல், சௌக்கியம்

சிறப்பு, சனி, சீற்றம், சாலை 
        - சனி, சாலை, சிறப்பு, சீற்றம்

இமயம், உலகம், அன்பு, ஐவர் 
        - அன்பு, இமயம், உலகம், ஐவர்

உழவன், வாணிபம், இடையன், ஊதியம் 
        - இடையன், உழவன், ஊதியம், வாணிபம்

ஏணி, ஈடுபாடு, ஆசை, ஊண் 
        - ஆசை, ஈடுபாடு, ஊண், ஏணி

தமிழ், படித்தல், ஊக்கம், இனிமை 
        - இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்

தூண்டில், தங்கம், தேர், திங்கள் 
        - தங்கம், திங்கள், தூண்டில், தேர்

கொக்கு, கீரி, கௌதாரி, கிளி 
        - கிளி, கீரி, கொக்கு, கௌதாரி

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.