சிற்றிலக்கியம் குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர் குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும். முக்கூடற்பள்ளு ஆசிரியர் குறிப்பு: இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர். சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம். அம்மானை ஆசிரியர் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார். ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயராகும் தாண்டவமூர்த்தி என்பவர்க்கு மகனாக பிறந்தார். இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார். இவர் திருவாடுதுஐற ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தார். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். நூல் குறிப்பு திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று. கலம்பகம் – கலம் + பகம் எனப் பிரியும், கலம் – பன்னிரண்டு, பகம் – ஆறு ஆக பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது. ...