Skip to main content

Posts

வரலாற்றில் இன்று - 01.03.2022 - செவ்வாய்

நிகழ்வுகள் 2007 – ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர். 2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது. 2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது. 1995 – யாகூ! [yahoo]ஆரம்பிக்கப்பட்டது. 1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் மற்றும் தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. ரஷ்ய ஏவுகணைகள், யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார். அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய...

வரலாற்றில் இன்று - 28.02.2022 - திங்கள்

நிகழ்வுகள் இன்று 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும். 2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது. 2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 2005 – ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர். 2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 24.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 24.02.2022 மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பொது களத்தில் கிராமப்புற இணைப்பு ஜிஐஎஸ் தரவை வெளியிட்டார் குழந்தைகளுக்கான PM CARE திட்டம் 28 பிப்ரவரி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா தனது முதல் ஐஐடியை நாட்டிற்கு வெளியே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைக்க உள்ளது அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகமான ‘நிகர்ஷன் சதன்’ மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார்

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 23.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 23.02.2022 International Ø இஸ்ரேலிய கடற்படையின் Sa’ar 6-வகுப்பு கொர்வெட்டுகளில் பயன்படுத்த புதிய கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பு “C-Dome” ஐ இஸ்ரேல் வெற்றிகரமாக சோதித்தது. Ø   C-Dome என்பது அயர்ன் டோமின் கடற்படைப் பதிப்பாகும், இது காசா பகுதியில் இருந்து குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் அனைத்து வானிலை வான் பாதுகாப்பு அமைப்பாகும். Ø வெற்றிகரமான சோதனையானது இஸ்ரேலிய கடற்படையின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மேலும் பலப்படுத்துகிறது, இது இஸ்ரேல் அரசின் கடல்சார் சொத்துக்களைப் பாதுகாக்கிறது.

வரலாற்றில் இன்று - 23.02.2022 - வியாழன்

நிகழ்வுகள் 2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது. 2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர். 1999 – குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். 1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர். 1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - கம்பராமாயணம்

  கம்பராமாயணம் இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது கம்பராமாணயம் ஒரு வழி நூல் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல் கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல் இயற்றியவர் கம்பர் குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர். பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர் கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார். கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்