Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - கம்பராமாயணம்

 கம்பராமாயணம்

  • இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது
  • கம்பராமாணயம் ஒரு வழி நூல்
  • வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
  • கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்
  • இயற்றியவர் கம்பர்
  • குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
  • பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர்
  • கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை
  • கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
  • கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
  • கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்

கம்பராமாயணம் நூல் அமைப்பு

  • காண்டம் – 6,
  • படலம் – 113,
  • பாடல்கள் – 10569

காண்டம்

  1. பாலகாண்டம்
  2. அயோத்தியா காண்டம்
  3. ஆரண்ய காண்டம்
  4. கிஷ்கிந்தா காண்டம்
  5. சுந்தர காண்டம்
  6. யுத்த காண்டம்
  • முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்
  • தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்
  • காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்
  • திருமாலின் அவதாரம் இராமன்
  • இராமனின் குலம் சூரிய குலம்
  • தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா)
  • வளர்ப்புத்தாய் கைகேயி
  • நாடு கோசலம்
  • நகரம் அயோத்தி
  • ஆசிரியர் வசிட்டர்
  • கைகேயியின் தோழி கூனி
  • கூனியின் இயற்பெயர் மந்தரை
  • கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி

இராமனின் தம்பியர் மூவர்

  1. பரதன்
  2. இலக்குவன்
  3. சத்ருக்கனன்

இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்

  1. குகன்
  2. சுக்ரீவன்
  3. வீடணன்
  • இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை.
  • விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்.
  • இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்.
  • இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை
  • சீதையின் தந்தை ஜனகன்
  • சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
  • பரதன் மனைவி மாண்டலி
  • இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்)
  • சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்)
  • இராவணன் மனைவி மண்டோதரி
  • கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை
  • வீடணன் மனைவி சுரமை
  • கைகேயியின் மகன் பரதன்
  • சுமத்திரையின் மக்கள் இலக்குவன்,சத்ருக்கனன்
  • ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்
  • திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்
  • கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்.
  • குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்
  • கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி
  • வாலி மனைவி தாரை
  • வாலி மகன் அங்கதன்
  • வாலி தம்பி சுக்ரீவன்
  • வாலியைக் கொன்றவன் இராமன்
  • சுக்ரீவன் அமைச்சன் அனுமான்
  • இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
  • இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
  • அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
  • இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை
  • வீடணன் மகள் திரிசடை
  • இராவணன் மகன் இந்திரஜித்
  • இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்
  • இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
  • இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்
  • 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
  • தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
  • இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
  • மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
  • செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
  • இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
  • உடைவாள் ஏந்தியவன் அங்கதன்
  • வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்
  • கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்
  • முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்
  • கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.

கம்பர் எழுதிய பிற நூல்கள்

  1. ஏர் எழுபது
  2. திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
  3. சடகோபர் அந்தாதி
  4. சரசுவதி அந்தாதி
  5. கம்பர் மகன் அம்பிகாபதி
  • அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
  • இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்

புகழுரைகள்

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்

இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதி

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.