Skip to main content

வரலாற்றில் இன்று - 01.02.2022 - செவ்வாய்


1. 2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

2. 2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.



3. 2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

4. 2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

5. 2005 – கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

6. 2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

7. 2004 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர்.

8. 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

9. 2002 – சனவரி 23 இல் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கடத்தல்காரர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

10. 1998 – கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

11. 1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.

12. 1991 – லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

13. 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.

14. 1974 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் உயிரிழந்தனர், 293 பேர் காயமடைந்தனர்.

15. 1972 – கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.

16. 1958 – எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

17. 1953 – வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.

18. 1946 – அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.

19. 1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.

20. 1942 – அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வெளிநாட்டு வானொலி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.

21. 1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

22. 1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

23. 1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

24. 1893 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் மேற்கு ஒரேஞ்சு நகரில் கட்டி முடித்தார்.

25. 1884 – ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

26. 1880 – யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.[1]

27. 1864 – டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.

28. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

29. 1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.

30. 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.

31. 1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

32. 1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.

33. 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.

34. 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான்.

35. 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான்.

36. 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...