Skip to main content

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி 

1559 : முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். 
 1759 : உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 
 1799 : இலங்கையில் அடிமைகள் கொண்டு வரப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 
 1822 : கொழும்பு, களனி ஆற்றிற்கு குறுக்கே மிதவைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. 
 1867 : லண்டன், ரீஜண்ட்ஸ் பூங்காவில் படகு ஏரியை மூடிய பனி இடிந்து விழுந்து 40 பேர் உயிரிழந்தனர். 
 1876 : ஆப்ரிக்காவின் முதல் செய்தித்தாள் டை ஆப்ரிகன்ஸ் பேட்ரியாட் வெளியிடப்பட்டது. 
 1889 : கோகோ கோலா கம்பெனி அட்லாண்டாவில் நிறுவப்பட்டது. 
 1892 : ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார். 
 1908 : யாழ்ப்பாணத்துக்கும் காரை நகருக்கும் இடையே பயணிகள் படகு சேவை ஆரம்பமானது. 
 1910 : அக்காலத்தின் மிக உயர்ந்த அணையான பஃபலோ பில் அணை கட்டப்பட்டது. 
 1911 : பாலஸ்தீன அரபு மொழி முதல் செய்தித்தாள் பாலாஸ்டின் வெளிவந்தது. 
 1919 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் இரு சோஷலிஸ்டுகள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லிப்னெக்ட் ஆகியோர் துணை ராணுவக் குழுவினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். 
 1934 : பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,700 பேர் வரை உயிரிழந்தனர். 
 1936 : முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டிடம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கட்டப்பட்டது. 
 1943 : அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் :- ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர். 
 1944 : அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். 
 1949 : சீன உள்நாட்டு போர் :- கம்யூனிஸ்ட் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடமிருந்து கைப்பற்றின. 
 1966 : நைஜீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 
 1969 : சோவியத் ஒன்றியம் சோயுஸ் - 5 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. 
 1970 : நைஜீரிய உள்நாட்டுப் போர் :- நைஜீரியாவிடம் 32 மாத விடுதலைப் போரின் பின்னர் பியாஃப்ரான் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். முஹம்மர் அல்-கதாபி லிபியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 1973 : வியட்நாம் போர் :- அமைதிப் பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடை நிறுத்தினார். 
 1975 : போர்ச்சுகல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது. 
 1977 : ஸ்வீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 
 2001 : விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. 
 2005 : செல்போன்களில் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 2007 : சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராஹிம் மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 
 2013 : சிரியாவின் அலெப்போ பல்கலைக்கழகம் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 
 2016 : சோமாலியாவில் அல்- ஷபாப் இஸ்லாமியப் போராளிகளுடனான போரில் கென்யா ராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர். 
 2019 : கென்யா, நைரோபியில் சோமாலியப் போராளிகள் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர். 19 பேர் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.