Skip to main content

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்


 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.

474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான்.

1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.



1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்..

1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1701 – புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.

1778 – அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார்.

1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

1806 – இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

1824 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

1871 – வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.

1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.

1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சு, வேர்சாயில் ஆரம்பமானது.

1929 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால் விடுவிக்கப்பட்டது.

1960 – அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் யனம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.

1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

1969 – அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

1974 – இசுரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.

1976 – லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.

1977 – பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

1977 – ஆத்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.

1993 – அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள் அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2003 – ஆத்திரேலியா தலைநகர் கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.