Skip to main content

வரலாற்றில் இன்று - 20.01.2022 - வியாழன்




2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்

2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.
1995 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார்.

1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.

1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.

1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.

1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.

1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.

1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.

1941 – செருமனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.

1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.

1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.

1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.

1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.

1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.

1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.

1816 – இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.

1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.

1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

1783 – 1783 பாரிசு உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.

1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.

1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார்.



Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.