Skip to main content

வரலாற்றில் இன்று - 24.01.2022 - திங்கள்


2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,.

2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார். இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.



2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.

1990 – சப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.

1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.

1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.

1978 – கொசுமசு 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.

1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் மறைந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.

1968 – வியட்நாம் போர்: ஆத்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு வட வியட்நாம் இராணுவம், மற்றும் வியட்கொங் மீது தாக்குதலக்ளை ஆரம்பித்தது.

1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.

1961 – இரண்டு H-குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.

1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.

1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.

1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.

1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.

1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.

1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.

1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.

914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.

41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.


Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.