Skip to main content

வரலாற்றில் இன்று - 29.01.2022 - சனி



2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.



1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.

1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.

1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.

1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.