Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

1. எழுவாய் பயனிலை அமைப்பு:

எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும்.


நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள், அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன.
வண்டி ஓடும், வண்டிகள் ஓடும்
மரம் விழும், மரங்கள் விழும்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
நாட்டை ஆண்டவன் அரசன் ஆகும்.

செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் வினைகள் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால், போன்ற நான்கு பாலுக்கும் வரும்.
தன்மை, முதனிலை, படர்க்கை (பலர்பால்) இவற்றில் செய்யும் என்னும் வாய்பாடு முற்று வராது.

வண்டி ஓடியது வண்டிகள் ஓடின.
பறவை பறந்தது பறவைகள் பறந்தன.
குதிரை மேய்ந்தது குதிரைகள் மேய்ந்தன.

2. எழுவாய் செயப்படுபொருள் பயனிலை அமைப்பு:

இராமன் வில்லை வளைத்தான் – எனத் தொடர் அமையும்.

3. தொகுதி பெயர் : ஒன்றன் பால்விகுதிபெறும்
ஊர் சிரித்தது
உலகம் அழுதது.

4. பெயரெச்சத்தின் முடிவில் பெயர்வரும்:

இன்று வந்த மழைக்காலம் என அமையும்.
இன்று மழை வந்த காலம் எனத் தொடர் அமையாது. கோயிலுக்குப் போன மாலா திரும்பினாள் என அமையும்.

5. வினையெச்சத்தை அடுத்து வினை வரும்:

(வினையெச்சத்தில் அடைச்சொற்கள் சில வரும்)
முருகன் வந்து போனான், முருகன் வேகமாக வந்து போனான்.

6. செயப்படு பொருளும் வினையெச்சமும் வரும் போது முதலில் செயப்படு பொருள் வரும்:

இராமன்/ வில்லை / வளைத்துப் / புகழ் / பெற்றான்.
அவன் / பெண்ணைக் / கொடுத்துத் / திருமணம் செய்வித்தான்.
முருகன் / அரக்கனை /அழித்து / வெற்றி / பெற்றான்.
நான் / பணத்தைக் / கொடுத்துப் / பழம் / வாங்கினேன்.
நான் பணம் கொடுத்துப் பழம் வாங்கினேன் என்று அஃறிணையில் ‘ஐ’ மறைந்தும் வரும்.

7. பெயரடை சிதறாது /பெயரை விட்டு விலகாது:

நான் நேற்று நல்ல பையனைப் பார்த்தேன் (பெயரை – மத்தியில் எதுவும் வராது)
நான் நேற்று (என்வீட்டிற்குப் பக்கத்திலிருந்த குடியிருந்த நல்ல பையனைப்) பார்த்தேன்.
நான் கடையில் (திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளை) வாங்கினேன்.
பெட்டியில் உள்ள சொற்கள் சிதறாது.

8. வேற்றுமை உருபுகள்: (2 – ஐ, 3-ஆல், 4-கு, 5-இன், 6-அது, 7-கண்)

அ) 2 – 3 நான் முருகனைப் பார்த்தேன்
நான் முருகனைக் கண்ணால் பார்த்தேன்
என இரண்டாம் வேற்றுமை உருபு முதலில் வந்து மூன்று வேற்றுமை உருபு அடுத்து வரும்.

ஆ) 4 – 2 – 3  கு – ஐ – ஆல்
தாய் குழந்தைக்கு உணவைக் கையால் ஊட்டினாள்

இ) 4 – 2 – 7  கு – ஐ – கண் (இடம்)
இராமனுக்கு புத்தகத்தை கடையில் வாங்னேன்

ஈ) 3 – 2 – 3  ஆல் – ஐ – ஆல்
கண்ணால் பார்த்தவனைக் கையால் அடித்தேன்

9. விளிச்சொல் முதலில் நிற்கும்:
இராமா இங்கே வா (சரியானது)
இங்கே வா இராமா (தவறானது)

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது. யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். ஐரோ...