Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்

வினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்


அ) வேர்ச்சொல் – (எ.டு) படி

(ஆ) வினைமுற்று – (எ.டு) படித்தான் – (படி + த் + த் + ஆன்)

(வினைமுற்றுப் பெற்றதை அறிவிக்கும்)



(இ) வினையெச்சம்:

(எ.டு) படித்து வந்தான் – (படி + த் + த் + உ)

(‘உ’ என்ற விகுதியுடன் எஞ்சி நிற்கும் எச்சம் இரு வினைச் சொல்லைக் கொண்டு முடியும்)

(ஈ) விணையாலணையும் பெயர் – (எ.டு) படித்தோம் – (படி என்ற வினைச் சொல்லால் அணைந்த பெயர்ச்சொல்)

(உ) தொழிற்பெயர் – (எ.டு) படிப்பு – (படி என்ற தொழிலைப் பெயர்ச் சொல்லாக்கி உள்ளது. தொழிற்பெயர் தல் அல் அம் ஐ சி பு – என்ற விகுதிகளுடன் முடியும்)

(எ.டு)

நட – வேர்ச்சொல்

நடந்தான் – வினைமுற்று

நடந்து – வினையெச்சம்

நடந்தோர் – வினையாலணையும் பெயர்

நடத்தல் – தொழிற்பெயர்





Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.