Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை.

ஒருமை – பன்மை
புத்தகம் – புத்தகங்கள்
கால் – கால்கள்
மனிதர் – மனிதர்கள்

ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும்.



(எ.கா) ‘மாடு மேய்கின்றன’ என்ற சொற்றொடரில் மாடு ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது ‘மேய்கின்றன’ என்ற பன்மைப் பெயரைக் குறிக்கும். வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. ‘மேய்கிறது’ என்ற ஒருமைப் பெயரைக் குறிக்ககூடிய வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே
மாடு மேய்கின்றன – தவறு
மாடுகள் மேய்கின்றன – சரி
மாடு மேய்கிறது – சரி
வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.

1. உயர்திணை எழுவாய் உயர்திணைப் பயனிலையை பெற்று வரும். அதே போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே (து.று) வரவேண்டும்
(எ.கா)
அவன் மிகவும் சிறந்தவன்
சுப்பன் மிக நல்லவன்
வண்டி வந்தது, கோழி கூவிற்று

2. எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
(எ.கா)
கோதை படித்தது – தவறு
கோதை படித்தாள் – சரி

3. ‘கள்’ விகுதி பெற்ற எழுவாய்,வினைமுற்றிலும் ‘கள்’ விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் மரியாதைப் பன்மை வினைமுற்றில் ‘ஆர்’ விகுதி வருதலும், பலர்பால் வினைமுற்றில் ‘அர்’ விகுதி வருதலும் தெரிந்து கொள்ளலாம்.
(எ.கா)
மாணவர்கள் தேர்வு எழுதினார் – தவறு
மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் – சரி

4. எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்
(எ.கா)
என் எழுதுகோல் இதுவல்ல – தவறு
என் எழுதுகோல் இது வன்று – சரி

5. தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றையே எழுத வேண்டும்.(எ.கா)
தலைவர் நாளை வந்தார் – தவறு
தலைவர் நாளை வருவார் – சரி

6. கூறியது கூறல் ஒரே தொடரில் இடம்பெறக் கூடாது.

7. வாக்கியத்தில் உயர்திணை அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்புக் கருதின் உயர்திணைப் பயனிலை கொண்டும் இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டும், வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
(எ.கா)
மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் – தவறு
மூடனும் மாடும் குளத்தில் குளித்தன – சரி

8.உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒரு துணைவினை கொண்டு முடித்தல் வேண்டும்.(எ.கா)
ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – தவறு
ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – சரி

9. ‘ஒவ்வொரு’ என்னும் தொடர் ஒருமையையும் ஒவ்வொருவர் என்னும் தொடர் பன்மையையும் வினைமுற்றாகக் கொள்ளும்.
எ.கா
ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது
ஒவ்வொன்றும் நாள்தோறும் வெடிக்கிறது

ஓவ்வொருவர்: ஒவ்வொருவர் எனும் தொடர் பன்மை வினைமுற்றை கொள்ளும்
ஒவ்வொருவரும் குறள் படிக்கின்றனர்
செல்வி, லதா, கீதாஞ்சலி ஒவ்வொருவரும் நன்கு படிக்கின்றனர்
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு உண்மையை விளக்குகின்றது
ஒவ்வொரு – உயிர்மெய் முன் வரும்
ஒவ்வோர் – உயிர் முன் வரும்

10. ஐயம் காட்டும் ஓகாரம் வரும்போது பிரிப்புக்காக வரும் ‘ஆவது’ என்னும் சொல்லின் பின்னும் ‘அல்லது’ எனும் சொல் வருதல் கூடாது. வினைமுற்று ஒருமையாகவே முடியும்.
ஒன்றோ அல்லது இரண்டோ தருக (தவறு)
ஒன்றோ இரண்டோ தருக (சரி)
நாயாவது நரியாவது தின்றிருக்கும் (தவறு)
நாய் அல்லது நரி தின்றிருக்கும் (சரி) என்று தான் வர வேண்டும்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.