Skip to main content

வரலாற்றில் இன்று - 04.02.2022 - வெள்ளி


2015 – டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.
2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய “பிரமாசு” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.2003 – யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக செர்பியாவும் மொண்டெனேகுரோவும் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1998 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,323 பேர் உயிரிழந்தனர்.
1997 – இசுரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் உயிரிழந்தனர்.
1992 – ஊகோ சாவெசு தலைமையில் வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் கார்லோசு பேரெசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
1977 – சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர்.
1976 – குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
1975 – சீனாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,041 பேர் உயிரிழந்தனர்.
1974 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1969 – பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
1966 – நிப்போன் ஏர்வேய்சு விமானம் டோக்கியோ வளைகுடாவில் வீழ்ந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.
1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.
1957 – இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: “மூன்று பெரும் தலைவர்கள்” (சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின்) உக்ரேனில் கிரிமியாவில் நடந்த யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.
1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.
1932 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.
1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் ஆரம்பமாகியது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மான்ட்கமரியில், பிரிந்து சென்ற ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின.
1859 – கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1834 – இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக கொழும்பு ஒப்சேர்வர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
1810 – கரிபியன் தீவுகளான குவாதலூப்பு பிரித்தானிய அரச கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
1797 – எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1794 – முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1802 இல் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் aடிமை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
1703 – தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர்.
1555 – ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர்.
1488 – பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1169 – சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர்.
960 – சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
211 – உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...