Skip to main content

வரலாற்றில் இன்று - 07.02.2022 - திங்கள்


2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.
2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.


2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.
1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.
1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1967 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.
1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
1812 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.
457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.