Skip to main content

வரலாற்றில் இன்று - 12.02.2022 - சனி


2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.
2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.
2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.
2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.
1974 – 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.
1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.
1935 – ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.
1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
1921 – போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.
1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.
1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.
1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
1855 – மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.
1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.
1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.
1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.
1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.
1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.
1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.
1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது. 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.