Skip to main content

வரலாற்றில் இன்று - 15.02.2022 - செவ்வாய்

2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.
2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.
2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.
2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.2001 – முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.
1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.
1994 – உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.
1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
1982 – நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.
1972 – ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.
1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.
1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.
1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1933 – மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.
1923 – கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.
1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.
1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1865 – இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.
1798 – முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1796 – டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.
1690 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1637 – புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.
1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.
1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.
706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.
590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...