Skip to main content

வரலாற்றில் இன்று - 18.02.22 - வெள்ளி

2018 – ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த  65 பேரும் உயிரிழந்தனர்.

2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

2014 – உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்,

2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.
2010 – விக்கிலீக்ஸ் பிராட்லி மானிங் என்ற அமெரிக்க இராணுவ வீர்ர் ஒருவர் கொடுத்த இரகசிய ஆவணங்களின் முதல் தொகுதியை வெளியிட்டது.

2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.

2003 – தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

2001 – இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.

2001 – அமெரிக்கப் புலனாய்வாளர் ராபர்ட் ஆன்சென் சோவியத் ஒன்றியத்தின் உளவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.

1991 – இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1957 – கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1957 – நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1948 – மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இதனைப் பெற்றுக் கொண்டார்.

1947 – பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.

1946 – இலங்கையில் ருவான்வெலிசாய தாதுகோபுரத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்தரின் உருவ ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.

1946 – மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் யப்பானிய இராணுவம் சப்பானிய விரோத சீனர்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1932 – சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார்.

1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

1873 – பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1861 – மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1832 – யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி தலைமையில் 18 பிரித்தானியக் கப்பல்கள் திரினிடாடை ஊடுருவின.

1745 – மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.

1637 – எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.

1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1332 – எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...