Skip to main content

வரலாற்றில் இன்று - 19.02.2022 - சனி

2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.



2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.


2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.

1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.

1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.

1965 – வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.

1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.

1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.

1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.

1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.

1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.

1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.

1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.

1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.

1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.

1815 – கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.

1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.

1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.

356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.